திருமலை பிரஹ்மோற்சவம் 2025 – முதல் 8 நாட்களின் சிறப்புகள்
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙏 அறிமுகம் திருமலை பிரஹ்மோற்சவம் ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளுக்காக ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடத்தப்படும் திருவிழாவாகும். இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இவ்விழாவில், பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களை அருள்பாலிக்கிறார். ‘பிரஹ்மோற்சவம்’ என்பது “பிரம்மனால் செய்யப்பட்ட உத்சவம்” என்ற பொருளை தருகிறது. இறைவனின் மகிமையை வெளிப்படுத்தும் விரிவான சடங்குகள், ஊர்வலங்கள் மற்றும் திவ்ய வாகன சேவைகள் மூலம் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த பதிவில் முதல் 8 நாட்களின் சிறப்பம்சங்கள் பகிரப்பட்டுள்ளன நாள் 1 – செப்டம்பர் 24: த்வஜாரோஹணம் & பெரிய சேஷ வாகனம் மாலை 5 மணிக்கு நடைபெற்ற த்வஜாரோஹணம் மூலம் பிரஹ்மோற்சவம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன், நீல-தங்க வஸ்திரத்தில் அலங்கரித்து, பெருமாள் எழுந்தருளினார். சிறப்பு நிகழ்ச்சி – ஆந்திரப் பிரதேச முதல்வர் பட்டுப் பட்டு வாஸ்திரம் சமர்ப்பிப்பு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ந. சந்திரபாபு நாயுடு, அரசின் சார்பில் பெருமாளுக்கு பட்டு...